நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கிடைத்த தகவலின்படி, தற்போது ஏற்பட்ட சமீபத்திய சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ அண்மித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளனர்.
