கண்டி அஸ்கிரிய பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் கீழ் சேவையாற்றி தற்போது ஓய்வுபெற்ற 26 உத்தியோகபூர்வ நாய்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். குறித்த ஏலம் எதிர்வரும் ஆகஸ்ட் 01ஆம் திகதி நடைபெற உள்ளது.
போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களை தேடும் விசேட நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இந்த நாய்கள் பொலிஸ் திணைக்களத்திற்காக இதற்கு முன்னர் தீவிரமாக பங்களிப்பு செய்துள்ளன.
இந்த நாய்களை வாங்க விரும்பும் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் ஏலத்திற்கு முன்னர் அவற்றை அவதானிப்பதற்கான விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 01ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை அஸ்கிரிய பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் விளையாட்டு மைதானத்தில் விலங்குகளை அவதானிக்க முடியும்.
அந்த அவதானிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் குறித்த உத்தியோகபூர்வ நாய்களை விற்பனை செய்வதற்கான பொது ஏலம் ஆரம்பிக்கப்படும்.