இசை நிகழ்ச்சிக்கு வந்த மக்களின் 500 தலைக்கவசங்கள் காணாமல் போயின

500-helmets-of-people-who-came-to-watch-a-music-concert-are-missing

ஹொரணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் ஒப்படைத்த சுமார் 500 பாதுகாப்பு தலைக்கவசங்கள் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 70க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.




நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் தமது மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை மைதானத்திற்கு வெளியே பணம் பெற்றுக்கொண்டு அவற்றை பொறுப்பேற்ற ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். இருப்பினும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைக்கவசங்களைப் பெறுவதற்காக மீண்டும் வந்தபோது அந்த இடத்தில் இருந்த பெரும்பாலான தலைக்கவசங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தலைக்கவசங்களை பொறுப்பேற்றிருந்த ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு இடையே மது அருந்திய சிலர் இந்த தலைக்கவசங்களை திருடினார்களா, அல்லது வேறு வழியில் இவை காணாமல் போனதா என்பதை கண்டறிய பாதுகாப்பு கெமரா காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.




ஹொரணை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் ரங்க பெரேரா அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ், பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி பராக்கிரம குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post