ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள ஹெல்மட் தலைக்கவசங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகை பரவியுள்ளதுடன், இதனால் அருகிலுள்ள பிரதேசவாசிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளுக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் தற்போது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.