பிரசன்ன ரணதுங்கவின் லஞ்சம் உறுதி - ஒரு கோடி செலுத்தப்படாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை

prasanna-ranatungas-ransom-confirmed---9-years-in-jail-if-he-does-not-pay-rs

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக, காணி நிரப்புவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட 100 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.




நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படாவிட்டால், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்திற்காக பிரதிவாதிக்கு 9 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இங்கு வலியுறுத்தியது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசன்ன ரணதுங்க சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த நட்டஈட்டுத் தொகையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தி முடிப்பதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். அந்த உறுதிமொழியை கருத்தில் கொண்ட நீதிமன்றம் பிரதிவாதியை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.




பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக ஒரு வர்த்தகரிடம் 640 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அந்த குற்றத்திற்காக 250 இலட்சம் ரூபாய் அபராதமும், 100 இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post