வெளிநபர்களுக்கு பத்திர நகல்களை வழங்கிய கொழும்பு காணிப் பதிவாளர் ருவினி நாலிகா நீதிமன்றத்தில்

colombo-land-registrar-who-gave-the-copies-of-deeds-to-outsiders-ruwini-channel-court

கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் இரகசிய ஆவணங்களை வெளிநபர்களுக்கு வழங்கி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு காணிப் பதிவாளரை நிபந்தனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம உத்தரவிட்டார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர் பன்னிப்பிட்டிய, ருக்மலை, வசிக்கும் 51 வயதுடைய கே.

கே. ருவினி நாளிகா என்ற சந்தேகநபர்.




சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட பிரதான நீதவான், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், விசாரணைகளுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தடுக்கும் வகையில், சந்தேகநபரான பதிவாளர் மறு அறிவித்தல் வரை கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள் நுழைவதற்கும் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் 2ஆம் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், அவர் கொழும்பு காணிப் பதிவாளராக கடமையாற்றிய போது, அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பத்திரம் மற்றும் பத்திரங்களின் இரண்டாம் பிரதிகளின் தொகுதிகளுடன் தொடர்புடைய ஆவணங்களை சட்டவிரோதமாக வெளித்தரப்பினருக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவித்தனர்.




ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குதல், சதி செய்தல் மற்றும் காணிகளின் உண்மையான உரிமையாளர்களின் போலியான ஆவணங்களைத் தயாரித்து சம்பந்தப்பட்ட சொத்துக்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதற்கு உதவியது தொடர்பில் அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை விண்ணப்பங்கள் மற்றும் விடயங்களை விரிவாக பரிசீலித்த நீதவான் இந்த பிணை உத்தரவை அறிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post