நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வாகன ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், உடல்கள் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கடந்த 6ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் காரணமாக சிறைச்சாலை சிறப்பு தந்திரோபாயப் பிரிவின் 7 அதிகாரிகள் உயிரிழந்தனர்.