சிறந்த சாரதியாக விருதுகளை வென்றிருந்த கான்ஸ்டபிள் விபத்தில் உயிரிழந்தார்

the-constable-who-won-the-award-as-the-best-driver-died-in-an-accident

அனுராதபுரம் பாதெனிய A 28 பிரதான வீதியில், தலாவ மொரகொட சுனாமி சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்ற கோர விபத்தில், மொத்தமாக 74 புதிய பொலிஸ் சாரதிகளில் சிறந்த சாரதியாக விருதுகளையும் கோப்பையையும் வென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்ததாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.




இவ்வாறு உயிரிழந்தவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, அனுராதபுரம், நாச்சாத்தூவ வீதி, துறுவிலவில் வசித்த ஏ. டி. ருசிர தில்ஷான் (107837) என்ற 27 வயதுடைய கான்ஸ்டபிள் ஆவார். உயிரிழந்தவர் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறும் போது, மொத்தமாக 74 புதிய பொலிஸ் சாரதிகளில் சிறந்த சாரதியாக விருதுகளையும் கோப்பையையும் வென்ற திறமையான அதிகாரி என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்திருந்த ருசிர தில்ஷான், தனது காதலியுடன் அனுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற திருவிழாவைப் பார்க்கச் சென்று, தம்புத்தேகமவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, மீண்டும் ஹிதோகம நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தலாவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post