ஹொரணை டியூஷன் ஆசிரியர் போதைப்பொருளுடன் சிக்கினார்

horana-tuition-sir-caught-with-drugs

ஹொரணை நகரில் முன்னணி தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் தொகுதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்.




சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி, ஒரு சிம் கார்டு மற்றும் போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு தராசு ஆகியவையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் நர்த்தனகலவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றுள்ளார். போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.




இந்த சந்தேகநபர் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணி வந்தாரா என்பது குறித்தும், அவர் மூலம் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு செயல்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பயிற்சி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை இலக்காகக் கொண்டு ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post