
மஹவலத்தன்ன கஜுவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பலங்கொடை, மஹவலத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஆவார்.
கடந்த 23ஆம் திகதி முதல் இந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தை பலங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், இது ஒரு கொலை, தற்கொலை அல்லது நீரில் மூழ்கி இறந்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (25) பலங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
பலங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.