இந்தியருக்கு போலி ஆவணங்கள் மூலம் பிணை வழங்கச் சென்ற 2 பேருக்கு 2 வருட சிறைத்தண்டனை

2-years-in-prison-for-bailing-out-an-indian-with-forged-documents

இந்தியப் பிரஜை ஒருவருக்கு பிணை கையெழுத்திடுவதற்காக பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த கொழும்பு சாஞ்சி ஆரச்சிவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தலா இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.

போதரகம அவர்களால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.




அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள சாஞ்சி ஆரச்சிவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹுசைன் மொஹமட் மற்றும் ஹசிஸ் மொஹமட் ஆகியோரே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் ஆவர். அறியாத ஒருவருக்காக பணத்திற்கு பிணை வழங்குதல், போலியான தகவல்களைக் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் அச்செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீதவானால் இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவால் நீதிமன்றப் பதிவாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிவாதிகள் போலியான சத்தியக் கடதாசியைத் தயாரித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி பிணை கையெழுத்திடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.




வழக்கு விசாரணை நடைபெற்றபோது பிரதிவாதிகள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை, பிரதிவாதிகள் கூண்டில் இருந்த சந்தேகநபர்கள் தங்களுக்கு நீதி வழங்குமாறு கோரினர். தனக்கு ஒரு சிறிய குழந்தை இருப்பதால், அந்தக் காரியத்தில் கவனம் செலுத்தி நிவாரணம் வழங்குமாறு முதல் பிரதிவாதி நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post