நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்த நிலைமைகள் காரணமாக ஆறு பேர் காணாமல் போயுள்ளதுடன், மாவட்டம் முழுவதும் 2,331 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அம்மையார் உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 1,734 பேர் தற்போது நிறுவப்பட்டுள்ள ஏழு நலன்புரி மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் அதேவேளை, மற்ற நான்கு பேரும் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே காணாமல் போயுள்ளனர் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். மேலும், இந்த காலநிலை அனர்த்தங்கள் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.