ஹட்டன், கினிகத்தேன, பொல்பிட்டிய பிரதேசத்தில் ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன நான்கு பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் பெய்த பலத்த மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு இந்த துயரமான விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட விசேட மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் மேலும் இரண்டு பெண்களின் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.