கடவத்தையில் பட்டம் விட்ட இளைஞனுக்கு கத்திக்குத்து

a-young-man-who-flew-kites-was-stabbed-in-kadawatha

கடுவெலவில், தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கழுத்துப் பகுதியில் காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.




காதல் விவகாரம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற மற்றைய இரு சந்தேகநபர்களும் பின்னர் கடுவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தந்தை தற்போது கடமையிலுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post