அரசாங்கம் தடை செய்த ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்கள் இதோ

here-are-the-online-gambling-websites-banned-by-the-government

சரியான உரிமங்களைப் பெறாமல் இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 24 இணைய சூதாட்டம் மற்றும் பந்தய வலைத்தளங்களுக்கான அணுகலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் அளித்த அறிவிப்பின்படி நேற்று (04) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பதாவது, 2025 ஆம் ஆண்டு இலக்கம் 17 இன் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின்படி தேவையான செல்லுபடியான உரிமங்களைப் பெறாமல் இத்தகைய சேவைகளை நாட்டில் நடத்துவதும் ஊக்குவிப்பதும் அச் சட்டத்தின் 44 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் அத்துடன் சட்டவிரோத செயலாகும். அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டவிரோத வலைத்தளங்களை நாட்டிலிருந்து அணுகுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட 24 சட்டவிரோத இணைய சூதாட்ட வலைத்தளங்கள் பின்வருமாறு:




1xbet(dot)com

betway(dot)com/en-lk



22bet(dot)com

melbet(dot)com

unibet(dot)com

betfair(dot)com

dafabet(dot)com

bet365(dot)com

1win(dot)com

spinbetter(dot)com

10cric(dot)com

bc(dot)game

megapari(dot)com

pin-up(dot)bet

stake(dot)com

mostbet(dot)com

parimatch(dot)com

betwinner(dot)com

linebet(dot)com

4rabet(dot)com

rajabets(dot)com

dbbet(dot)com

coldbet(dot)com

WinWin(dot)

Post a Comment

Previous Post Next Post