ராகமவில் விபத்தில் சிறுமி உயிரிழப்பு

girl-dies-in-ragama-accident

ராகம - வல்ப்பொல வீதியில் வல்ப்பொல ரயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்றினால் ஏற்பட்ட விபத்தில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும் சகோதரரும் பலத்த காயமடைந்துள்ளனர்.




ராகமவில் இருந்து வல்ப்பொல நோக்கிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதியுள்ளது. அதன் பின்னர், அந்த லொறி வீதியோரமாக நடந்து சென்ற தாயையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் மோதி நிறுத்தியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ராகம பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post