இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரமேஷ் தரங்க உலக தடகள தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். குறுகிய காலத்திற்கு இரண்டாம் இடத்திற்குப் பின்தங்கியிருந்த அவர், சமீபத்திய உலக தரவரிசையின்படி மீண்டும் இந்த சிறப்பான சாதனையை எட்டியுள்ளார்.
ரமேஷ் தரங்க 1,363 புள்ளிகளைப் பெற்று இந்த முதலிடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ஜேர்மனியின் ஜூலியன் வெபருக்கு 1,342 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதன்படி, ஜேர்மன் வீரரை விட 21 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வீரர் முன்னிலையில் உள்ளார்.
உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தை கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் பெற்றுள்ளார், அண்மையில் நிறைவடைந்த டயமண்ட் லீக் போட்டியில் ரமேஷுக்கு கடுமையான போட்டியை அளித்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1,301 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.