அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் உண்மைகளை அம்பலப்படுத்தும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்ற புதிய திருத்தங்கள்.

new-amendments-do-not-punish-those-who-reveal-the-truth-about-bribery-and-corruption-of-bosses

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்கு முன்வைக்கப்படவுள்ள புதிய திருத்தங்களின்படி, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் முழுமையாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்தினால், இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு உடந்தையாளருக்கு எதிராக வழக்குத் தொடர்வதிலிருந்தோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதிலிருந்தோ விலக்களிக்கும் அதிகாரங்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு உரித்தாகும்.




2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கான இந்தத் திருத்த வர்த்தமானி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதுடன், சில பிரிவுகளின் சட்டரீதியான தாக்கங்கள் தொடர்பான மாற்றங்களும் இதில் அடங்கும்.

முன்மொழியப்பட்ட முக்கிய பிரிவுகளில், சட்டத்தின் 67 ஆம் பிரிவு திருத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் பணிப்பாளர் நாயகம் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.




ஊழல் காரணமாகப் பெறப்பட்ட அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றப்பட்ட எந்தவொரு சொத்தின் மதிப்பையும் மீட்டெடுக்கவும், ஒரு நபர் ஊழல் நடவடிக்கையின் மூலம் பெற்ற எந்தவொரு மானியம், நியமனம், நன்மை அல்லது ஆதாயம் ஆகியவற்றை குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட நாளிலிருந்து சட்டவிரோதமாக்கவும் மற்றொரு திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

கூடுதலாக, மாகாண பொதுச் சேவை அல்லது பொலிஸ் படையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஆணைக்குழுவின் பதவிகளுக்கு நியமிப்பதற்கும் இந்த புதிய திருத்தம் வழிவகுக்கிறது.

Post a Comment

Previous Post Next Post