வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகளை சுட்டுவிட்டு ஒரு வேட்டைக்காரன் மருத்துவமனையில்

poachers-shot-by-wildlife-officers-poacher-in-hospital

லுணுகம்வெஹெர தேசிய பூங்காவின் ரத்மல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் காயமடைந்த வேட்டைக்காரர் ஒருவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் சடலங்களுடன் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி பகல் வேளையில் லுணுகம்வெஹெர வனப் பூங்கா களுபாலம் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது வேட்டைக்காரர்கள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பதிலடி கொடுத்ததையடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.




கைது செய்யப்பட்ட 44 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசவாசியிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், வேட்டையாடப்பட்ட இரண்டு புள்ளி மான்களின் சடலங்களும் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டங்களின் கீழ் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது தப்பிச் சென்ற மற்றைய வேட்டைக்காரரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தினால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வனவிலங்கு பிரதேச பாதுகாப்பு அதிகாரி ரன்திஸ் சேனாநாயக்க, வனவிலங்கு பிரதேச உதவியாளர் ஏ. ரத்நாயக்க மற்றும் கள உதவியாளர் டபிள்யூ.ஜி. சோவீர ஆகியோர் அடங்கிய வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post