தலவத்துகொடையில் கொரியர் ஒருவரால் தாக்கப்பட்டதில் சிவில் பொறியியலாளர் லக்ஷ்மன் உயிரிழந்தார்

civil-engineer-lakshman-killed-in-attack-by-korean-in-thalawathugoda

தலவத்துகொட, வெலி வீதி பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் தலவத்துகொட, வெலி வீதியில் வசித்து வந்த கே.

கே. டி. லக்ஷ்மன் குமாரசிங்க என்ற 58 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஆவார்.




சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர் இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து வெலி வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் என்பதுடன், தென் கொரியாவுக்கு செல்ல விரும்பும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கொரிய மொழியை கற்பித்து வருகிறார். உயிரிழந்த பொறியியலாளரும் சந்தேகநபரும் அயலவர்கள் என்பதுடன், ஏதோ ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கொரிய நாட்டவர் பொறியியலாளரை தாக்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் காரணமாக படுகாயமடைந்த சிவில் பொறியியலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கொரிய நாட்டவர் தொடர்பில் தலங்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post