இலஞ்ச ஆணைக்குழு ரவி ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை அறிவிக்கிறது

bribery-commission-announces-why-ravi-was-arrested

முன்னாள் நிதி அமைச்சர் சண்ட்ரேஸ் ரவீந்திர கருணாநாயக்க, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி பி.ப 1.40 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு இலக்கம் 20 சட்டத்தினால் திருத்தப்பட்ட இலஞ்சச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் ஊழல் எனும் குற்றத்தைச் செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இந்தக் குற்றச்சாட்டு, அவர் 2015 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 2017 மே 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது இடம்பெற்ற சம்பவம் தொடர்பானது. அந்தக் காலப்பகுதியில் நிதி அமைச்சின் விசேட திட்டம் எனக் குறிப்பிட்டு, தேசிய லொத்தர் சபையின் அப்போதைய தலைவர் ஷியாமிலா பெரேராவுடன் இணைந்து மூன்று பேரை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் என இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் தேசிய லொத்தர் சபைக்கு எந்தவொரு சேவையையும் வழங்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவ்வாறு சேவையைப் பெறாமல் தேசிய லொத்தர் சபையின் நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் இந்த ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.




இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் விரைவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

news-2026-08-31-104801

Post a Comment

Previous Post Next Post