மின்னேரியாவில் பஸ் விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில்

22-hospitalized-in-minneriya-bus-accident

பொலன்னறுவை - ஹபரண பிரதான வீதியில் மின்னேரியா, 7ஆம் மைல் கல் தேவாலய வளைவுக்கு அருகில் மெதிரிகிரியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.




இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 22 பயணிகள் உடனடியாக ஹிங்குரக்கொட மற்றும் ஹபரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இந்த பகுதி அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

22-hospitalized-in-minneriya-bus-accident



22-hospitalized-in-minneriya-bus-accident

22-hospitalized-in-minneriya-bus-accident

Post a Comment

Previous Post Next Post