களுபோவில பாதாள உலக தரின்ந்துவின் வீட்டிற்கு கைக்குண்டுத் தாக்குதல்

an-underworld-grenade-attack-on-a-house-in-kalubowila

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில, விமலசிறி வீதிப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று (09) இரவு 11.45 மணியளவில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




சந்தேகநபர்கள் வீட்டின் பிரதான வாயிலுக்குள் கைக்குண்டை வீசியுள்ளனர். அது வெடித்ததில் வீட்டின் முன் பக்கத்தில் உள்ள இரண்டு ஜன்னல்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இச்சம்பவத்தால் அவருக்கோ அல்லது வேறு எந்த நபருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பொலிஸ் விசாரணைகளில், இந்தத் தாக்குதலுக்கு இலக்கான வீடு, பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான திசாநாயக்க முதியன்சேலாகே அவிஷ்க ஈஷான் என்பவரின் நண்பரான தரிந்து ரவிஷான் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் ஆதரவாளர்களுடன் இவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




கைக்குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கொஹுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post