இரண்டு குழந்தைகள் கடும் நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போயினர் - அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு வெளிநாட்டவர் மிரிஸ்ஸவில் மீட்கப்பட்டார்

two-children-missing-after-being-swept-away-by-the-waves---a-white-man-who-was-swept-away-by-the-waves-is-rescued-in-mirissa

வெலிகம மற்றும் பாயாகல பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு நீரில் மூழ்கும் சம்பவங்களில் 15 வயதுடைய இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதுடன், மிரிஸ்ஸ கடலில் சிக்கிய அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரை பொலிஸ் உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.




பொலிஸார் தெரிவித்தபடி, வெலிகம தெனிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் செப்டெம்பர் 19 ஆம் திகதி மேலும் இரு சிறுவர்களுடன் தம்பொக்க நுக்கதூவ பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பொல்வத்துமோதர ஆற்றின் கிளை நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளான்.

மேலும், செப்டெம்பர் 19 ஆம் திகதி மாலை குடா பாயாகல பிரதேசத்தில் மேலும் ஒரு 15 வயதுடைய சிறுவன் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.




காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், செப்டெம்பர் 19 ஆம் திகதி மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த அலையில் சிக்கிய 30 வயதுடைய அவுஸ்திரேலியர் ஒருவர் மிரிஸ்ஸ பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார்.



இவ்வாறு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்ட சுற்றுலாப் பயணிக்கு முதலுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கையை உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான மயூர, அதிகாரி, குமாரசிங்க மற்றும் ஹசங்க ஆகிய அதிகாரிகள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post