சிமெந்து லாரி ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு கட்டிடத்திலும் நான்கு வாகனங்களிலும் மோதியது

cement-truck-veers-off-the-road-and-crashes-into-a-building-and-four-vehicles

திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சிமெந்து ஏற்றிச் சென்ற லொரி சாரதிக்கு நித்திரை வந்ததால், கந்தளாய் நகரில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள், ஒரு கட்டிடம் மற்றும் மின்சார, தொலைபேசி கம்பிகள் என்பவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.




ஓடிக்கொண்டிருந்த சிமெந்து லொரி முதலில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு ஏற்றப்பட்ட கொள்கலன் வாகனத்துடன் மோதியதுடன், பின்னர் வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் கம்பம் மற்றும் அருகிலிருந்த கட்டிடத்துடன் மோதியது.

விபத்தில் உடைந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் கம்பிகள் வீதியை நோக்கி சாய்ந்திருக்க, திருகோணமலையிலிருந்து மீன் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட லொரி ஒன்று அந்தக் கம்பிகளுக்கு அடியில் செல்ல முயன்றது. அப்போது மின் கம்பிகள் லொரியில் சிக்கி இழுபட்டு, வீதியின் மறுபக்கத்திலிருந்த மற்றொரு மின் கம்பம் உடைந்து விழுந்து, அருகிலிருந்த பேருந்து மற்றும் தொலைபேசி கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டது.




இந்த சம்பவத்துடன் பிரதான வீதியில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டதுடன், பொலிஸார் தலையிட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுத்தனர். இச்சம்பவம் தொடர்பில் கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

cement-truck-veers-off-the-road-and-crashes-into-a-building-and-four-vehicles

Post a Comment

Previous Post Next Post