சிறைகளில் அடைத்து நாமல் ராஜபக்ஷவின் எழுச்சியைத் தடுக்க முடியாது - ரோஹித

namal-rajapaksas-rise-cannot-be-stopped-by-putting-him-in-prison---rohitha

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியை செயலிழக்கச் செய்யும் நோக்கில் நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.




அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களுக்கு மத்தியில் மக்கள் மேலும் அணிதிரள்வார்கள் என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியது, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே அன்றி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து பழிவாங்குவதற்காக அல்ல என்பதையும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post