தேரருக்கு நான் அளித்த மன்னிப்பு தவறு என்று எனக்கு இன்னும் தெளிவாகவில்லை - மைத்திரிபால

its-still-not-clear-to-me-that-my-forgiveness-to-the-monk-was-wrong---maithripala

கலாநிதி கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தான் எப்போதும் அரசியலமைப்பிற்கு அமையவே செயற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.




அங்கு, குறித்த தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அதுபற்றி எனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அதுபற்றி என்னால் இன்னும் எதுவும் சொல்ல முடியாது.”




அந்த மன்னிப்பு உரிய ஆய்வின்றி வழங்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, முன்னாள் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவித்தார்.

“ஆம், நான் அதை என் காலத்தில் மிகவும் சாதகமாகச் செய்துள்ளேன். இப்போது அது எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் 19வது திருத்தத்தின் கீழ் எனது அதிகாரங்களை நான் நீக்கினேன். எனது பதவிக்காலத்தை நீக்கினேன். அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதன்பிறகு எனக்குப் பிறகு வந்த அரசாங்கத்தினர் அதை மீண்டும் நீக்கிவிட்டு, 19வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை… 20வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் ஜனாதிபதிக்கு பல அதிகாரங்கள் உள்ளன. எனவே, அதுபற்றி எங்களால் எதுவும் சொல்ல முடியாது.”

Post a Comment

Previous Post Next Post