பொரலெஸ்கமுவவில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

one-person-killed-in-shooting-at-a-house-in-boralesgamuwa

பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய நபரொருவர் இன்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.




உயிரிழந்தவர் தனது வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பிஸ்டல் துப்பாக்கியால் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

one-person-killed-in-shooting-at-a-house-in-boralesgamuwa

one-person-killed-in-shooting-at-a-house-in-boralesgamuwa

Post a Comment

Previous Post Next Post