கொழும்பு 4, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து பம்பலப்பிட்டி காசல் லேனில் அமைந்துள்ள 'காசல் ஸ்கைலைன் ரெசிடென்சீஸ்' குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்காக உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு சேவைத் திணைக்களம், இதுவரை ஐந்து தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இதுவரை வளர்ந்து வரும் நிலைமை என்பதால், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.