சிறைச்சாலையில் ஜம்பர் அணிந்திருக்கும் பிக்குகள் சீவரத்தை துறப்பது: மகாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு குழு இணக்கம் தெரிவித்தது

the-committee-agrees-to-the-request-of-the-mahanayake-thero-to-remove-the-robes-of-monks-sitting-in-jail

சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகள் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு தமது சீவரத்தை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலை சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சம்பந்தப்பட்ட பிக்குகள் சார்ந்த பிரிவினால் அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவிக்கும் வரை தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார தெரிவித்தார்.




சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் மற்றும் நிரந்தர கட்டளைகளை புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார். அக்குழுவின் பரிந்துரைகளின்படி, சிறைச்சாலை நிரந்தர கட்டளை 356 ஐ திருத்தி, அதற்கு 356 (அ) என புதிய பகுதியொன்றைச் சேர்ப்பதற்கும், திணைக்களக் கட்டளை 550 ஐ திருத்துவதற்காக இடைக்கால உத்தரவொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களின்படி, ஒரு பௌத்த பிக்கு கைதியாக சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பத்தில் விசேட நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளது. அங்கு அந்த கைதி இதுவரை அணிந்திருந்த தமது உடையை அகற்றுவது தொடர்பில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்து, அதற்கமைய உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




நிரந்தர கட்டளை 550 இற்கு புதிதாக சேர்க்கப்படும் பகுதியினூடாக, சிறையில் அடைக்கப்பட்ட பிக்கு ஒருவருக்கு சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீவரத்தை அணிந்திருக்க சட்டபூர்வமாக உரிமை கிடைக்கும். மேலும், வேறு மதத்தைச் சேர்ந்த மதகுருமார்களின் பிரதிநிதி ஒருவர் கைதியாக மாறும் சந்தர்ப்பத்திலும் இந்த ஏற்பாடுகள் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய சாராம்சத்தை உள்ளடக்கிய இடைக்காலக் குழு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கடிதம் தற்போது பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தற்போது நடைமுறையிலுள்ள சிறைச்சாலை நிரந்தர கட்டளைகளை விரைவாக திருத்துமாறு அமைச்சர் ஆணையாளர் நாயகத்திற்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post