தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (28) பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருபத்தி மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அனர்த்தத்தில் இதுவரை பதினான்கு சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். மண்மேடுகளுக்கு அடியில் புதையுண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த பத்து வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பிரதேசவாசிகள் அஞ்சுகின்றனர்.
Tags:
News