நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடன், இன்று (28) ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நாவலப்பிட்டிய, பழைய ரயில்வே யார்ட் வீதிப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், விபத்து நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த மனைவி, அவரது மாமியார் மற்றும் மூன்று மாத வயதுடைய ஒரு குழந்தை என நாவலப்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களைக் காப்பாற்ற பிரதேசவாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து பெரும் முயற்சி எடுத்த போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
கடும் மழையினால் வீட்டின் மீது மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தற்போது நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டிய பிரதேச செயலாளர் ரம்யா ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.
Tags:
News