ஸ்ரீ பாத வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவித்த அவர், ஒவ்வொரு வருடமும் கடும் மழை பெய்யும் காலங்களில் ஸ்ரீ பாத வளாகத்திற்குக் கீழே அமைந்துள்ள பாறையில் வளர்ந்துள்ள தாவரப் பகுதிகள் மழைநீருடன் கீழே விழுவது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு என்று சுட்டிக்காட்டினார்.
ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய இரு பாதைகளும் இணையும் இடிகட்டு பஹன பாதைக்கு அண்மித்த பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஸ்ரீ பாத வளாகத்திற்கோ அல்லது புனித ஸ்தலத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி தேரர் மேலும் உறுதிப்படுத்தினார்.
Tags:
News