மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று இன்று (30) பிற்பகல் லூணுவில பிரதேசத்தில் திடீர் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த விமானி, மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய சிரேஷ்ட விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் சியம்பலாபிட்டிய ஆவார்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் இன்று பிற்பகல் லூணுவில மற்றும் வென்னப்புவ பகுதிகளுக்கு இடையில் அனர்த்த கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அனர்த்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட லூணுவில மற்றும் வென்னப்புவ பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இந்த ஹெலிகொப்டர் புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்றபோது உயிரிழந்த விமானி உட்பட ஐந்து விமானப்படை வீரர்கள் அதில் பயணித்துள்ளனர். விபத்துக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் உடனடியாக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காணொளி இங்கே கிளிக் செய்யவும்
Tags:
News
