
கூரை சூரிய மின் தகடு (Rooftop Solar) அமைப்புகளைப் பயன்படுத்தும் நுகர்வோரிடம் இலங்கை மின்சார சபை (CEB) விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அந்த சூரிய மின் தகடு அமைப்புகளைத் தானாக முன்வந்து செயலிழக்கச் செய்யுமாறு சபை சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் மின்சாரத்திற்கான தேவை கணிசமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வது அத்தியாவசியமானது என மின்சார சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
Tags:
News