இவ்வாறு உயிரிழந்தவர் முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்ஷன் என்ற இளைஞன் ஆவார்.
வறுமை காரணமாக வேலை தேடி யாழ்ப்பாணம் வந்திருந்த இந்த இளைஞன், நேற்று (டிசம்பர் 1) குருநகர் - பாசையூர் பிரதேசத்தில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
சம்பவம் நடந்தபோது, வீட்டின் ஒரு பக்கச் சுவர் இடிக்கப்பட்ட பின்னர், அது இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இளைஞன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு அறைக்குள் ஓடியுள்ளார்.
அச்சமயத்தில், மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், ரவிச்சந்திரன் டிலக்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் அவர்களால் நடத்தப்பட்டது.
Tags:
News