சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குறித்த வீதி விபத்தைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (12) நண்பகல் பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் பியகம தொகுதி பிரதான அமைப்பாளராகவும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டி வந்த ஜீப் வண்டி, ஒரு பெண் ஓட்டி வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக பாராளுமன்ற உறுப்பினரும் காயமடைந்துள்ளதுடன், காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு சிறு குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
News
