அம்பலாங்கொடை நகரில் அமைந்துள்ள சிங்கர் ஷோரூமின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) காலை பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் அல்லது அதைச் செய்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இச்சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.