நக்கிள்ஸ் வனப்பகுதி ஊடாக சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

opposition-to-building-a-road-through-knuckles

 இலங்கையின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தற்போது நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோத சாலை அபிவிருத்தி திட்டம் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி தலையிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.



சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. திலேன் பத்ராகொடவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட கடிதம், யுனெஸ்கோ அமைப்பின் இலங்கை தேசிய ஆணைக்குழு ஊடாக யுனெஸ்கோ பொதுச் செயலாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தங்கப்புவிலிருந்து கோர்பெட்ஸ் கேப் (Corbet's Gap) வரை 8 கிலோமீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி ஊடாக அமைக்கப்படவுள்ள இந்த சாலை காரணமாக, உலகளாவிய முக்கியத்துவம் மற்றும் உயர் பல்லுயிர்த்தன்மை கொண்ட நக்கிள்ஸ் உலக பாரம்பரிய தளத்தின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.

வனவிலங்கு மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் கீழ் நாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நக்கிள்ஸ் பிரதேசத்தில் இவ்வாறான ஒரு கட்டுமானத்தை மேற்கொள்வது குறித்த சட்டத்தை வெளிப்படையாக மீறுவதாகும் என்றும்,


இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்பதையும் அந்த அமைப்பு கடுமையாக வலியுறுத்துகிறது.

அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் பாரம்பரியங்களை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பாரிய பிரச்சினை உருவாகியுள்ளதால், இது குறித்து அவசர மீளாய்வை மேற்கொள்ளுமாறு சுற்றுச்சூழல் நீதி மையம் யுனெஸ்கோ பொதுச் செயலாளரிடம் மேலும் கோரியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post