சஜித் பிரேமதாச தலைமையில் ஐ.தே.க மற்றும் ச.ம.ச விசேட கலந்துரையாடல்

unp-and-sjb-hold-special-discussion-under-the-leadership-of-sajith-premadasa

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் (ஐ.ம.ச) இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது நாட்டின் தேசிய சவால்கள் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கொள்கை உத்திகளை வகுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.




இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது குறித்து 'X' சமூக ஊடக வலையமைப்பில் பதிவொன்றை இட்டு பிரேமதாச குறிப்பிடுகையில், "எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தேசிய இலக்குகளை திறமையாகவும் பயனுள்ளதாகவும் அடைவதற்கு புதிய கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது." என்றார்.




ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சாத்தியமான கூட்டணி குறித்து அதிகரித்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது ஒரு சிறப்பம்சமாகும்.

Post a Comment

Previous Post Next Post