கல்வித் துறையை மீட்டெடுக்க யுனிசெஃப் பிரதிநிதிகள் இணக்கம்!

unicef-helps-restore-education

கல்வித் துறையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான உதவிகளை வழங்க யுனிசெஃப் அமைப்பு இணங்கியுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டது. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதரவைப் பெறுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.





இந்தச் சந்திப்பின்போது, இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் பாடசாலை மாணவர்கள் உட்பட முழு மாணவர் சமூகத்தையும் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.




மண்சரிவு அபாயமுள்ள பாடசாலைகளை வேறு பாதுகாப்பான இடங்களில் அமைப்பது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இதன்போது தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் அளித்து, பெற்றோர்களுக்கு எவ்வித மேலதிக நிதிச் சுமையையும் ஏற்படுத்தாமல், அப்பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு, இலங்கையின் கல்வித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக யுனிசெஃப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

Post a Comment

Previous Post Next Post