பம்பலப்பிட்டி கடலில் அலங்கார மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் பாறையில் சிக்கி உயிரிழப்பு!

a-young-man-who-went-diving-to-catch-ornamental-fish-in-the-bambalapitiya-sea-got-stuck-in-a-rock-and-died

 பம்பலப்பிட்டி கடற்கரையின் ஆழ்கடலில் மூழ்கி அலங்கார மீன் பிடித்துக்கொண்டிருந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் பாறையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் பல்லவத்த, பெர்னாண்டோ வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஜோர்ஜ் செல்வம் ஷெஹான் அந்தோனி என்ற இளைஞர் ஆவார்.



இவர்கள் இருவரும் வழக்கமாக அலங்கார மீன் பிடித்து வந்துள்ளனர். நேற்று (10) இரவு 11.00 மணியளவில் பம்பலப்பிட்டி கடற்கரையில் இருந்து கடலுக்குள் இறங்கி மூழ்கத் தொடங்கியுள்ளனர்.

கடல் அடியில் சுமார் 10 அடி ஆழத்திற்கு மூழ்கி, சுமார் 10 மீட்டர் இடைவெளியில் நீந்திச் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஒரு சகோதரன் திரும்பிப் பார்த்தபோது தனது உறவினர் சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து அவர் உடனடியாக கரைக்கு வந்து அது குறித்து விசாரித்துள்ளார்.

கரையிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், மீண்டும் ஒருமுறை கடலுக்குள் மூழ்கி தேடுதல் நடத்தியபோது, காணாமல் போன இளைஞர் கடல் அடியில் ஒரு பாறைக்குள் சிக்கியிருப்பதைக் காண முடிந்தது.

பின்னர், சம்பவம் குறித்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கடற்படை அதிகாரிகள் இன்று காலை உயிரிழந்த இளைஞரின் உடலை பாறைக்குள் இருந்து கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post