களுபோவில துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமியின் தாய்க்கு பாதாள உலகத் தொடர்புகள்

mother-of-16-year-old-girl-injured-in-kalubowila-shooting-has-underworld-connections

கோஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில, சரணங்கர வீதி, போதியவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அந்த வீட்டில் இருந்த 16 வயது மாணவி காயமடைந்து சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




சம்பவம் தொடர்பில் கோஹுவல பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் உண்மையான இலக்கு காயமடைந்த மாணவி அல்ல, அவரது தாய் என்பது தெரியவந்துள்ளது.

காயமடைந்த சிறுமியின் தாய், பாதாள உலகக் குழு உறுப்பினர் "படொவிட்ட அசங்க" என்பவரின் நெருங்கிய உதவியாளர் என்ற தகவல் வெளியாகியுள்ளதுடன், கடந்த 22ஆம் திகதி நுகேகொட பிரதேசத்தில் "துபாய் அவிஷ்கா" என்பவரின் சீடரைக் சுட்டுக் கொல்வதற்காக அவர் உளவு பார்த்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.




மேலும், சம்பந்தப்பட்ட பெண் "துபாய் அவிஷ்கா"வின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை எதிரி பாதாள உலகக் குழு உறுப்பினர் "படொவிட்ட அசங்க"விடம் வழங்கியுள்ளார் என்பதும் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

news-2025-12-31-201334

news-2025-12-31-201334

Post a Comment

Previous Post Next Post