விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பதவி விலகுகிறார்

resigned-as-chairman-of-airports-and-aviation-services-sri-lanka-private-company

ஏர் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.




அபேவிக்ரம அவர்கள் 2024 அக்டோபரில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட போதிலும், நிறுவனத்திற்குள் ஏற்படவிருக்கும் சில நிறுவன கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து, அப்பதவியின் கடமைகளை மேற்பார்வையிட துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கல அவர்கள் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post