தெஹிவளை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு கொலை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தெஹிவளை, ஹில்டா பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 46 வயதுடைய ஆண் ஆவார். சடலம் தொடர்பான தகவல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது ஒரு கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஒரு பணிமனைக்கு முன்னால் இந்த வீடு அமைந்துள்ளதுடன், தெஹிவளை, சஞ்சயபுர வைத்தியசாலை வீதி முகவரியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தாக்குதல் ஒன்றினால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.