ஜே.வி.பி. வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கிறது

jvp-us-venezuela-invasion

மக்கள் விடுதலை முன்னணி (ஜ.வி.பி.) ஓர் அறிக்கையை வெளியிட்டு, சுதந்திரமான மற்றும் இறைமையுள்ள நாடான வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பையும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்றதையும் கடுமையாகக் கண்டித்துள்ளது.




வேறு எந்த சுதந்திரமான மற்றும் இறைமையுள்ள நாட்டிலும் உள்ளதைப் போல, வெனிசுவேலாவின் எதிர்காலத்தையும் நாட்டின் தலைமையையும் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது என்பதை ஜ.வி.பி. அங்கு வலியுறுத்தியது.

சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்த கோட்பாடுகளை மீற உரிமை இல்லை என்பதையும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. நவீன சமூகம் மற்றும் ஆட்சி முறைகள் நாகரிகமானதாக இருக்க வேண்டும் என்றும், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் இறைமை ஆகியவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளாகக் கருதப்பட வேண்டும் என்றும் ஜ.வி.பி. வலியுறுத்துகிறது.




இந்தக் கோட்பாடுகளை மீறி இறைமையுள்ள நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகள் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

அதன்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொண்ட பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பு எவரது ஒப்புதலையும் பெறாது என்று தாங்கள் நம்புவதாகவும் ஜ.வி.பி. கூறியது.



அத்துடன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பை கடுமையாகக் கண்டிப்பதாகவும், வெனிசுவேலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காக ஜ.வி.பி. துணை நிற்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post