அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை

arguna-charged

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால், முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட்டது.




தம்மிக்க ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரிய மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை மீறி தன்னிச்சையாக எரிபொருள் கொள்வனவுகளை மேற்கொண்டதன் மூலம் அரசுக்கு 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆறு மாத காலப்பகுதிக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எரிபொருள் கொள்வனவு செய்யப்படவிருந்த மூன்று நீண்டகால ஒப்பந்தப்புள்ளிகள் இரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையில் இருபத்தேழு உடனடி ஒப்பந்தப்புள்ளிகள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post