சிறைச்சாலை அத்தியட்சகர் தாக்கப்பட்ட சம்பவம்: பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைது

prison-superintendent-assault-incident-four-boossa-prison-guards-arrested

பூஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் உதவிச் சிறை அத்தியட்சகர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் கைதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சிறைக்காவலர்கள் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டபடி, இந்தக் கைது நேற்று (08) மாலை இடம்பெற்றது.





இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 07ஆம் திகதி பதிவாகியுள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு, குறித்த இரண்டு கைதிகளும் உதவிச் சிறை அத்தியட்சகரைத் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு சிறைக்காவலர்களின் உதவியுடனும் ஆதரவுடனும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.




இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சிறைக்காவலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிதாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபரான சிறைக்காவலர்களும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம் மற்றும் காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ரத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் பிரியந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post