குடியரசு என்பது வெறும் பரம்பரை உரிமை அல்ல, அது எதிர்காலத்திற்காக பொறுப்புடன் பேணப்பட வேண்டிய ஒரு மதிப்புமிக்க கருத்து என்று சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதிலும் உள்ள இளம் தலைமுறையினரிடம் ஒரு விசேட கோரிக்கையையும் விடுத்துள்ளார். எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்க இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள், மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் பொது நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி செயல்படுவது அத்தியாவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரால் பெர்னாண்டோ, சமிந்திராணி கிரியல்ல, சதுர கலப்பத்தி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இந்திக அநுருத்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துக்கோரல ஆகியோரும் இணைந்துள்ளனர். அத்துடன், இலங்கை பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷவும் இந்த தூதுக்குழுவில் அடங்குவார் என்பதுடன்,
இந்த விஜயத்தின் போது உலகின் சிறந்த அனர்த்த முகாமைத்துவ மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா அனர்த்த முகாமைத்துவ மையத்தை பார்வையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், அசோகப் பேரரசரின் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த தொல்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்கும் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.