இந்திய சிறப்பு மருத்துவர்கள் குழுவொன்று நாட்டிற்கு

a-group-of-indian-specialist-doctors-to-sri-lanka

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள "சுரக்ஷா" முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 05 நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று இன்று (23) நாட்டிற்கு வந்துள்ளது.




சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த குழு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவர்கள் பங்கேற்கும் மருத்துவ முகாம் நாளை (24) மற்றும் மறுநாள் (25) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதுடன், இதற்காக உள்நாட்டு மருத்துவர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவும் பங்கேற்கவுள்ளது.




இந்த நிபுணத்துவ மருத்துவர்கள் குழு இன்று (23) மாலை 04.15 மணிக்கு இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இண்டிகோ விமான சேவையின் 6.ஈ.- 1179 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post